How to Make Murungai Keerai Sambar and Chola dosai | சோள தோசை முருங்கை கீரை சாம்பார் | chola dosai & Murungai Keerai Sambar Recipe in tamil | How to Make Moringa Sambar | Drumstick Spinach Curry Recipe in tamil | சோள தோசை இப்படி பக்குவமா மாவு அரைச்சு ருசியா செய்யுங்க / chola dosa recipe/ jowar dosa recipe tamil
மிகவும் சத்தான முருங்கைக்கீரை சாம்பார்
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 200 கிராம்
பூண்டு - நாலு பல்
பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 150 கிராம்
முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு
சாம்பார் தூள் - இரண்டு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஐந்து
தக்காளி - 4
புளி - நெல்லிக்காய் அளவு
தேங்காய் எண்ணெய் - இரண்டு ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
தாளிப்பதற்கு
கடுகு ,சீரகம் ,வெந்தயம் - சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை
குக்கர்ல கழுவிய பருப்பு ,பூண்டு,மஞ்சள் தூள் ,பெருங்காயத்தூள் சேர்த்து நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயம் ,தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
முருங்கைக்கீரையை கழுவி வைத்துக் கொள்ளவும்.
கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு ,வெந்தயம் ,சீரகம் போட்டு தாளித்து சின்ன வெங்காயம் ,கிள்ளிய காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி அதனுடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி சாம்பார் தூள் போட்டு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
பின்பு அதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
அதில் வேகவைத்த பருப்பு ,கரைத்த புளித்தண்ணீர் ,தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்தவுடன் இறக்கி வைக்கவும்.
பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முருங்கைக் கீரையை போட்டு நன்கு வதக்கி அதை சாம்பாருடன் சேர்த்து நன்கு கலந்து விட்டால் சூப்பரான மிகவும் சத்தான முருங்கைக்கீரை சாம்பார் ரெடி.
#murungaikeeraisambar#murungaikeerai#Choladosai#MurungaiKeeraiSambar#MurungaiKeerai#NellaiVillageFood#Periyammasamayal#samayal#samayalkurippu
For More Recipes Visit http://samayalkurippu.com/
No comments:
Post a Comment